மத்திய அரசு ஊழியர்கள் கல்விப்படித் தொகை பெறுவதற்கு மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான சான்றுகளைச் சமர்ப்பித்தால், அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.4500 வீதம் கல்விப்படித் தொகை கிடைக்கும். எனவே அரசு ஊழியர்கள், குறித்த காலத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. எனினும், கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி படித் தொகையை (Children Education Allowance) பெற முடியாமல் இருந்தது. இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்விப் படித் தொகையை கிளைம் செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
எனவே கல்விப் படித் தொகைக்கு விண்ணப்பிக்கக் குழந்தையின் பள்ளி சான்றிதழை பெற வேண்டும். அதில், உங்கள் குழந்தை அந்தப் பள்ளியில் படிப்பதாக பள்ளி நிர்வாகம் சான்றிதழ் அளிக்க வேண்டும்.இதுபோக குழந்தையின் ரிப்போர்ட் கார்டு, கட்டண ரசீது ஆகிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.4,500 வரை
மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை கல்விப் படித் தொகை மாதம் 2250 ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகள் வரை மொத்தம் 4500 ரூபாய் வரை கல்விப்படித் தொகை பெறலாம்.
குழந்தைகளுக்கான கல்விப் படித் தொகையைப் பெறுவதற்கு கடைசி நாள் இம்மாத இறுதியுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. எனவே, கடைசி நாளுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்தால் சம்பளத்துடன் கல்விப் படித் தொகையும் சேர்த்துக் கிடைக்கும்.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!
Share your comments