சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பாம்பன் (ராமநாதபுரம்) பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேப்போல் கடந்த 24 மணிநேரத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவியதாக RMC chennai தெரிவித்துள்ளது.
தொண்டியில் அதிகப்பட்சமாக 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், குறைந்தப்பட்சமாக நாமக்கல்லின் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் சூழ்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
12.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13.12.2023 மற்றும் 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.12.2023 மற்றும் 18.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டுள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட நாட்களில் தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் வானிலைத் தொடர்பான விபரங்களுக்கு mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்படுகிறது.
Read also:
தங்கம் வாங்க நல்ல நேரம்- தொடர்ந்து 4 வது நாளாக விலை சரிவு
சில்லரை மற்றும் மொத்த விற்பனையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்!
Share your comments