2021-22ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமதக் கட்டணத்துடன் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
வருமான வரி தாக்கல் (Income Tax Return)
கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்தவர்களில் பலர் ஏற்கெனவே வருமான வரி ரீஃபண்ட் தொகையை பெற்றுவிட்டனர் அல்லது வருமான வரி ரீஃபண்ட் தொகை கிடைப்பதற்காக காத்திருக்கின்றனர். எனினும், சிறு சிறு தவறுகள் செய்தால் கூட வருமான வரி ரீஃபண்ட் தொகை கிடைக்காமல் போகலாம். அவ்வகையில், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பற்றி பார்க்கலாம்.
- வருமான வரித் தாக்கல் செய்தாலும் வருமான வரி ரிட்டனை வெரிஃபை (verify)செய்ய வேண்டும்.
- அல்லாவிட்டால் அந்த ரிட்டன் செல்லாததாக கருதப்படும்.
மேற்கூறியபடி செல்லாத ரிட்டன்கள் பிராசஸிங் செய்யப்படாது. - வருமான வரி ரிட்டன் பிராசஸிங் செய்யப்பட்டு உறுதிசெய்யப்பட்டால் (processing confirmation) மட்டுமே வருமான வரி ரீஃபண்ட் தொகை கிடைக்கும்.
எனவே, வருமான வரி ரீஃபண்ட் கிடைக்க வேண்டுமெனில் உடனடியாக உங்கள் வருமான வரி ரிட்டனை வெரிஃபை செய்ய வேண்டும். ஆதார் OTP வழியாகவும், வங்கிக் கணக்கு மின்னணு சரிபார்ப்பு கோடு (EVC) மூலமாகவும் எளிதாக வருமான வரி ரிட்டன் வெரிஃபை செய்யலாம்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் எப்போது? முக்கிய தகவல்!
Share your comments