இன்று இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கர்நாடகா வங்கி (Karnataka Bank) சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு KBL Amrit Samriddhi என பெயரிடப்பட்டுள்ளது.
ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit)
கர்நாடகா வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 75 வாரங்களுக்கான (525 நாட்கள்) ஃபிக்சட் டெபாசிட்டுக்கு கர்நாடகா வங்கி 6.10% வட்டி வழங்குகிறது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 வாரங்களுக்கு சிறப்பு வட்டி விகிதத்தை கர்நாடகா வங்கி வழங்குகிறது.
இதுகுறித்து கர்நாடகா வங்கியின் தலைமை நிர்வாகி மகாபலேஷ்வரா, “இந்தியா தனது மக்களின் வரலாற்றையும், சாதனைகளையும் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. வளமான தேசப்பற்று பாரம்பரியம் கொண்ட கர்நாடகா வங்கி தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறது.
இதற்காக KBL Amrit Samriddhi என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி உயர்வு பலன்கள் கிடைக்கும். இது ஒரு குறுகிய கால சலுகை என்பதால் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க
ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்: ரூ. 60 லட்சம் ரிட்டர்ன்!
75 வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
Share your comments