மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி சதவீதம் 31ல் இருந்து 34 ஆக அதிகரிக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA எனப்படும் அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்படுவது, ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாமலேயே இருந்தது. பின்னர் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியானதாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் இன்னும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வந்துசேரவில்லை. நிலுவைத் தொகையை விரைந்து வழங்கும்படி அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரே செட்டில்மெண்ட்
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் ஒரே செட்டில்மெண்ட்டாக மொத்தமாக செலுத்திவிடலாம் என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி சதவீதம் 31ல் இருந்து 34 ஆக அதிகரிக்கிறது.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9544.5 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவரவர் லெவலுக்கு (Level) ஏற்ப சுமார் 1,44,200 ரூபாய் முதல் 2,18,200 ரூபாய் வரை ஒரே செட்டில்மெண்ட்டாக அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும். எனவே இந்தத் தொகைக்கு எந்த செலவைச் செய்யலாம் என மத்திய அரசு ஊழியர்கள் இப்போதேத் திட்டமிடலாம்.
மேலும் படிக்க...
இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசம்- மாநில அரசு முடிவு!
Share your comments