1. மற்றவை

மூத்த குடிமக்களுக்கு சிறந்த வசதி அறிமுகம்: இனி மொபைல் இருந்தால் போதும்!

R. Balakrishnan
R. Balakrishnan
Senior citizens

யூனியன் பாங்க் ஆப் இந்தியா (Union Bank of India) வங்கி தனது வாடிக்கையாளர்கள் மிக எளிதாக மொபைலில் வாட்சப் (Whatsapp) வழியாக Form 15G மற்றும் Form 15H படிவங்களை சமர்ப்பிப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மூத்த குடிமக்கள்

யூனியன் வங்கி தனது வாடிக்கையாளர்கள் மொபைலில் வாட்சப் வழியாகவே Form 15G மற்றும் Form 15H சமர்ப்பிப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் 9666606060 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் Form 15G படிவத்தையும் 60 வயதை தாண்டியவர்கள் Form 15H படிவத்தையும் சமர்ப்பிக்கலாம். ஏழு மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

நல்ல வசதி

இந்த வாட்சப் வசதி எல்லா வாடிக்கையாளர்களுக்குமே பயனளிக்கும் வகையில் இருந்தாலும் கூட, சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல சேவையாக அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் சீனியர் சிட்டிசன்கள் வீண் அலைச்சலை தவிர்த்து வாட்சப்பிலேயே Form 15H சமர்ப்பிக்கலாம்.

Form 15G மற்றும் Form 15H

வைப்பு நிதி திட்டங்களில் (Fixed deposit) முதலீடு செய்தவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் (TDS) வரி வசூலிக்கக்கூடாது என்பதற்கு தாக்கல் செய்ய வேண்டிய படிவம் Form 15G.

60 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்கள் வைப்பு நிதி திட்டத்தில் தங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யக்கூடாது என்பதற்கு வங்கியிடம் Form 15H படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க

PF பயனாளிகளுக்கு மொபைலில் இப்படி ஒரு வசதி இருக்கா: தெரிந்து கொள்ளுங்கள்!

LIC-யின் ஒரே ஒரு பிரீமியம் போதும்: வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும்!

English Summary: Introducing Better Convenience for Senior Citizens: Mobile is Enough! Published on: 26 April 2023, 08:27 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.