கந்துவட்டி கும்பல் கொடுமையால் வாழ்க்கையை இழக்கும் மக்கள், அவர்களிடமிருந்து தப்பிக்க அது தொடர்பான சட்டத்தை அறிந்து கொள்வது அவசியம். கந்துவட்டி வசூலிப்பவர்கள் பற்றி, தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்தனர். கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவிப்பவர்கள், அச்சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, போலீசில் புகார் அளிக்கலாம்.
கந்துவட்டி தொடர்பான சட்டங்கள்
அதீத வட்டி வசூல் தடை சட்டம்
அதிக வட்டி வசூலிப்பதை தடுக்க, தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடை சட்டம், 2003ல் கொண்டு வரப்பட்டது. கடனை வசூலிக்க அடியாட்களை ஏவி விட்டு மிரட்டுதல், தாக்குதல் நடத்தவதால், கடன் பெற்றவர்கள் அதற்கு பயந்து, தற்கொலை செய்வது அதிகரித்தது. இதை தடுக்க அதீத வட்டி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி தினசரி வட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி ஆகிய ஐந்து வகையான பெயர்களில், வட்டி வசூலிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கலாம்.
அதீத வட்டி வசூலிப்போருக்கு, மூன்றாண்டு சிறை, 30,000 ரூபாய் அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமுள்ளது.அதீத வட்டி கொடுமையால், யாராவது தற்கொலை செய்தால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி, தற்கொலைக்கு துாண்டிய குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.
கடன் வழங்கும் தொழில் செய்வோர், தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்து, சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழ் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது புகார் அளிக்கலாம்.
முகவரி முக்கியம் (Address Important)
யாரிடம் கடன் பெறுகிறோமோ அவரது முழு முகவரி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். முகவரி வாங்க மறந்தால், கடன் கொடுத்தவர், மூன்றாவது நபரை வைத்து மிரட்டி கந்து வட்டி வசூலிக்கும் போது, கடன் கொடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.
மேலும் படிக்க
ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!
சொந்த செலவில் சிமென்ட் சாலை அமைத்த இளைஞர்: கிராம மக்கள் பாராட்டு!
Share your comments