இந்திய ஐடி துறையில் மூன்லைட்டிங் விவகாரம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மூன்லைட்டிங் செய்யும் ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன. மேலும், மூன்லைட்டிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
ஐடி ஊழியர்கள் (IT Employees)
மூன்லைட்டிங் (Moonlighting) என்றால் என்ன? ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டே வேறு நிறுவனத்துக்கும் வேலை செய்துகொடுப்பதுதான் மூன்லைட்டிங் எனப்படுகிறது. ஊழியர்கள் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக மூன்லைட்டிங் செய்கின்றனர். அண்மையில், விப்ரோ நிறுவனம் மூன்லைட்டிங் செய்த சுமார் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதையடுத்து டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்களும் மூன்லைட்டிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மூன்லைட்டிங் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐடி நிறுவனங்கள் எச்சரித்தன.
இந்நிலையில், ஐடி நிறுவனமான ஹேப்பியஸ் மைண்ட்ஸ் (Happiest Minds Technologies) மூன்லைட்டிங் செயல்பாடுகளில் ஈடுபட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி நேரத்திலேயே மூன்லைட்டிங் செய்த ஊழியர்களை ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் பணிநீக்கம் செய்துள்ளது.
பணி நீக்கம்
மேலும், மூன்லைட்டிங் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மூன்லைட்டிங் செய்வது ஒப்பந்தத்தை மீறுதல் எனவும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்லைட்டிங் செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு மூன்லைட்டிங்கிற்கு எதிரான செய்தியை அனுப்பவே இப்படி செய்துள்ளதாகவும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் ஜோசப் அனந்தராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தீபாவளி பரிசு அளித்த மாநில அரசு!
Share your comments