இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை கடந்த 3 வருடமாக அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையிலும், இந்திய ஐடி துறை பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகது.
அதிகப்படியான வேலைவாய்ப்பு, வீட்டில் இருந்து பணியாற்றினாலும் முழு சம்பளம் என மொத்த நுகர்வோர் சந்தையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியது IT துறை தான், ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக தலை கீழாகியுள்ளது. அப்படி என்ன நேர்ந்தது வாருங்கள் பார்க்கலாம்!
குறிப்பாக முன்னணி IT சேவை நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் அமர்த்துவதை பெரிய அளவில் குறைத்துள்ளது.
IT Companies:
TCS, Accenture,HCL உள்ளிட்ட இந்திய IT நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,000 முதல் 15,000 ஊழியர்களை மட்டுமே புதிய பணியில் சேர்த்துள்ளது. இது முந்தைய காலாண்டை ஒப்பிடும் போது எண்ணிக்கையில் குறைந்திருப்பது காணமுடிகிறது.
பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சனை
இந்திய IT சேவை நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியமர்த்தும் எண்ணிக்கையை குறைத்துள்ளது என நம்பப்படுகிறது. அமெரிக்காவில் கூகுள், மைக்ரோசாப்ட், டெஸ்லா, மெட்டா போன்ற முன்னணி டெக் நிறுவனங்களும் பணி அமர்த்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Accenture IT துறையின் பெரு நிறுவனங்களில் ஒன்றாகும். இந் நிறுவனம் கடந்த மூன்று காலாண்டில் சராசரியாக 40,000 பேரை பணியமர்த்தியுள்ள நிலையில், மே மாதத்தில் முடிவடைந்த மிக சமீபத்திய காலாண்டில் 12,000 நபர்களை மட்டுமே பணியமர்த்தியது. மே மாத துவக்கத்தில் Accenture சுமார் 1லட்சத்து 50,000 ஊழியர்களை புதிதாக நியமிக்க திட்டமிட்டுள்ளது.
New GST Rates: இன்று முதல் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்களின் பட்டியல்!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்: ஏப்ரல்-ஜூன் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 14,136 புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் சராசரியாக ஒரு காலாண்டில் பணியமர்த்தப்பட்ட எண்ணிக்கை 26000, ஆனால் ஜூன் காலாண்டில் இது பெரிய அளவிலான சரிவு என்பது குறிப்பிடதக்கது. கடந்த 12 மாதங்களில் TCS நிறுவனத்தின் அட்ரிஷன் 19.7% விகிதமாக உள்ளது.
HCL டெக்னாலஜிஸ் இதேபோலவே, HCL டெக்னாலஜிஸ் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,089 புதிய ஊழியர்களை மட்டுமே பணியமர்த்தியுள்ளது. FY22 இன் இறுதி காலாண்டில் 11,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 12 மாதங்களில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது.
மேட்டூர் அணையில் நிரம்பிய தண்ணீர்! மக்கள் அவதி!
Recession அச்சம்
இதேவேளையில் இனி வரும் காலாண்டிலும் புதிய வாடிக்கையாளர்களை பணியில் அமர்த்துவது என்பது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வல்லரசு நாடுகளில் ரெசிஷன் வந்தால் கட்டாயம் பெரிய பாதிப்பு ஏற்படும், இதில் இருந்து தப்பிக்க செலவுகளை குறைப்பது முக்கிய பணியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க:
மீண்டும் சரிவை கண்ட தங்கம் விலை! ஆபரணத் தங்கம் விலை இதோ!
PM Kisan திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இதை செய்ய வேண்டியது கட்டாயம்!
Share your comments