ஆதார் என்பது 12 இலக்க எண் கொண்ட ஒரு அடையாள அட்டையாகும். இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு அவசியம். ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் கிடைக்காது என்ற நிலைமை வந்துவிட்டது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், சிம் கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில் இணைக்கப்பட்டு தனிநபர் தகவல் கொண்ட மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.
ஆதார் அட்டை (Aadhar Card)
ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் உள்ளது. வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் பயன்படுகிறது.
வங்கிகளில் ஆதார் என்பது மிக முக்கியமான விஷயமாக உள்ளது. நீங்கள் புதிதாக வங்கிக் கணக்கு திறப்பதாக இருந்தால் அதற்கு ஆதார் கார்டு பெரிதும் உதவுகிறது. அதாவது, ஆதார் கார்டில் உங்களுடைய தனிநபர் விவரங்களை அப்டேட்டாக வைத்திருந்தால் வங்கிக் கணக்கு திறப்பது மிகச் சுலபம்.
இதுகுறித்து ஆதார் அமைப்பு (UIDAI) தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், வங்கிக் கணக்கு திறப்பதற்கு ஆதார் இருந்தால் மிக எளிது என்று கூறியுள்ளது.
அதேபோல, ஆதாரில் அப்டேட் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக எளிதாக செய்ய முடியும் எனவும், இதற்கு கட்டணமாக ரூ.25 மற்றும் ரூ.50 வசூல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. இதில் 25 ரூபாய் என்பது ஆன்லைன் சேவைக் கட்டணம். அதேபோல, நேரடியாக ஆதார் சேவை மையத்துக்குச் சென்று அப்டேட் செய்தால் அதற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க
ஐடி ஊழியர்களே உஷார்: இதை செய்தால் பணிநீக்கம் நிச்சயம்!
பென்சன் காலத்தில் உங்களுக்கு உதவும் தங்க சேமிப்புத் திட்டம்: பல லட்சங்களில் இலாபம்!
Share your comments