1. மற்றவை

ஜாக்பாட்: ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Fisherman who became a millionaire overnight

ஒரே நாளில் கோடீஸ்வரரான பல கதைகளைக் கேட்டிருப்போம், அதேபோல இங்கு உண்மையிலேயே ஒரு மீனவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் வாருங்கள் பார்க்கலாம்.

மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சந்திரகாந்த் டாரே(Chandrakant Thare). மீனவரான டாரே மீன்பிடி தடைக்காலம் முடிந்தபின் கடந்த 28ம் தேதி, தனது படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.

மீன்பிடிக்க சென்றவருக்கு முதல் நாளிலேயே அதிர்ஷடம் காத்திருந்தது. ஆம், வலையில் மிக அதிகளவிலான மீன்கள் சிக்கின, இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்துக்கொண்டார். அப்போது வலையில் சுமார் 150  மீன்கள் பிடிபட்டு கிடைத்தன. அவருடன் சென்றவர்கள் மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர், ஏனெனில் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்.

கோல் மீன் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களுக்காக பெயர்பெற்றது. இது பல்வேறு நாடுகளில் மிகவும் உயர்ந்த விலையில் விற்கப்படுகிறது.

இந்த மீன் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு சிறப்புவாய்ந்தது. டாரே இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டது, அந்த ஏலத்தில் சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு இந்த மீன்கள் ஏலம் போனது.

இதனை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏழாம் எடுத்தனர். கோல் மீன்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் காணப்படுகின்றன. கோல் மீன்கள் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தவை. இதன் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ் ஆகும்(Protonibia dyacanthus).

இந்தோனேசியா தாய்லாந்து ஹாங்காங் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இதன் தேவை அதிக அளவில் உள்ளது.  மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக கோல் மீன்கள் கருதப்படுவதால் இந்த மீன்கள் தங்க மீன்கள் என்று வர்ணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க:

பெண்களுக்கு ரூ. 1000 விரைவில்! முடிந்தது காத்திருப்பு!

இந்த ரேஷன் அட்டைகள் விரைவில் முடக்கப்படும்!

English Summary: Jackpot: Fisherman who became a millionaire overnight!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.