மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் அவர்களின் Fitment Factor அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் பெருமளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
சம்பள உயர்வு (Salary hike)
மத்திய அரசின் ஊழியர்களுக்கு கடந்த 2022 ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படியானது 4% அதிகரிக்கப்பட்டு தற்போது 38% ஆக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2023 ஜனவரி முதல் ஜூன் மாத தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. அவ்வாறு, DA உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், மத்திய அரசு பணியாளர்களுக்கு இம்முறை 4% DA அதிகரிக்கப்பட்டு, 42% ஆக உயர்த்தப்படும். இதனால், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் இருக்கும். இதேபோல், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2016ம் ஆண்டிற்கு பின் மத்திய அரசு ஊழியர்களின் Fitment Factor அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவ்வாறு உயர்த்தப்பட்டால், தற்போதைய 2.57% Fitment Factor, 3.68% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் சார்பாக கோரிக்கைகள் எழுந்து வருகிறது. மேலும், 3.68 %ஆக உயர்த்தப்படும் பட்சத்தில் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.18,000 ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
GST வசூல் எவ்வளவு தெரியுமா? 10 மாதங்களாக தொடர் சாதனை!
இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் மிகச் சிறந்த உணவுகள் இவை தான்!
Share your comments