ரயிலில் பயணிக்கும் போது இந்தத் தவறை மட்டும் நீங்கள் செய்தால் 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.
வெளியூர் பயணம் என்று நினைக்கும்போதே நம் நினைவுகளில் தவறாது இடம்பெறுவது ரயில் பயணம்தான். ஏனெனில், மற்ற போக்குவரத்துக்களோடு ஒப்பிடும்போது, ரயில் பயணம் மிகவும் செலவு குறைந்தது என்பது மட்டுமல்லாமல், சவுகரியம் நிறைந்ததும்கூட.
நிம்மதியாக, ஜாலியாக வெளியூர் செல்ல ரயில் பயணம் நமக்கு எல்லா சவுகரியங்களையும் அளிக்கிறது. எனவே பெரும்பாலானோர், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துப் பயணிக்கின்றனர். ஆனால், ரயில் பயணிகள் சிலத் தவறுகளைச் செய்யும்போது, சிறை தண்டனையைக்கூட அனுபவிக்க நேரிடும். எனவே அந்தத் தவறு என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதில் இருந்து விலகி இருப்போம்.
விதிகள்
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்து பயணிப்பவர்கள் அதிலுள்ள முக்கியமான விதிமுறைகள் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சில விதிமுறைகள் ரயில் பயணிகளுக்கு உதவியாகவும், சில விதிமுறைகள் கடுமையாகவும் இருக்கும்.
குற்றம்
நிறையப் பேர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து அது கன்பார்ம் ஆகாவிட்டாலும் அந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். விதிமுறைப்படி அது குற்றமாகும்.
அவ்வாறு வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை வைத்து நீங்கள் பயணம் செய்து பிடிபட்டால் ரூ.250 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி பொது கோச்சில் பயணிக்க வேண்டும்.
அபராதம்
ரயில் பயணத்தின் போது உங்களிடம் சரியான டிக்கெட் இல்லாவிட்டால் இந்திய ரயில்வே சட்டம் 138வது பிரிவின் கீழ், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரிவின் கீழ், நீங்கள் பயணித்த தூரத்திற்கு ரயில்வேயால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து செல்லும் தூரத்திற்கு இடையேயான கட்டணம் மற்றும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.
சிறை தண்டனை
இது தவிர, பயணச்சீட்டில் ஏதாவது ஏமாற்றம் செய்து பயணித்தால் ரயில்வே சட்டம் 137வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தண்டனைக்கு 6 மாதம் சிறை, 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எனவே இந்த விஷயத்தில் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
Share your comments