1. மற்றவை

ரூ.62,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை- தகுதி 10ம் வகுப்புத் தேர்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Jobs in the postal service at a salary of Rs. 62,000 - Qualification 10th class pass!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாட்டு கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறையின், தமிழ்நாடு வட்டம், கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.03.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கார் ஓட்டுனர் (Staff Car Driver)

காலியிடங்கள்
17

காலியிட விவரம்

கோயம்புத்தூர் – 11
ஈரோடு -2
நீலகிரி -1
சேலம் மேற்கு – 2
திருப்பூர் – 1

கல்வித் தகுதி(Educational Qualification)

10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் (Licence)வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் (Salary)

ரூ. 18,000 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி (Address)

The Manager,

Mail Motor Service,

Good Shed Road,

Coimbatore – 641 001

விண்ணப்பிக்கக் கடைசி தேதி  (Last Date)

10.03.2022

மேலும் படிக்க...

English Summary: Jobs in the postal service at a salary of Rs. 62,000 - Qualification 10th class pass! Published on: 25 January 2022, 11:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.