இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் வயதான காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட கைவசம் பணம் இருக்க வேண்டும். உங்களது குழந்தைகள் உங்களைக் கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதை விட உங்களது தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்வது நல்லது. அதற்கு பென்சன் பணம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பென்சன் (Pension)
இந்தியாவில் இப்போது நிறைய பென்சன் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் தேசிய பென்சன் திட்டம். தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.
தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் சேரலாம். ரூ.1,000 செலுத்தி நீங்கள் கணக்கைத் திறக்க முடியும்.
இத்திட்டத்தில் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, ரூ.15 லட்சம் கோடி வரையில் வரிச் செலவு மிச்சமாகும்.
தேசிய பென்சன் திட்டம் (National Pension Scheme)
தேசிய பென்சன் திட்டத்தில் சேமித்தே நீங்கள் லட்சாதிபதி ஆகிவிட முடியும். இப்போது உங்களுக்கு 25 வயது என்று வைத்துக்கொள்வோம். மாதத்துக்கு நீங்கள் 5,400 ரூபாய் சேமித்தால் உங்களது 60ஆவது வயதின் முடிவில் 10 சதவீத ரிட்டன் லாபத்தில் உங்களுக்கு ரூ.2.02 கோடி கிடைக்கும். அதாவது தினமும் நீங்கள் 180 ரூபாய் சேமித்தாலே போதும். கோடீஸ்வரன் ஆகிவிடலாம். இந்தத் திட்டம் இளம் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் இனி சீனியர் சிட்டிசன்களுக்கு நல்ல காலம் தான்!
தமிழ்நாட்டிற்கு 4758.78 கோடி ரூபாய் நிதி விடுவிப்பு: மத்திய அரசு!
Share your comments