EMI குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு, வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை SBI வங்கி கொடுத்துள்ளது. இந்த வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்களாக இருந்தால், செய்தி முழுவதையும் படியுங்கள்.
வட்டி உயர்வு (Rise in interest)
பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதாக விளங்கும் எஸ்பிஐ (State Bank of India) வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது எஸ்பிஐ வங்கி. இதனால், எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இஎம்ஐ (EMI) அதிகரிக்கும்.
எஸ்பிஐ வட்டி உயர்வு (SBI raises interest rates)
எஸ்பிஐ தற்போது கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, அடிப்படை வட்டி விகிதத்தை 7.10 விழுக்காட்டில் இருந்து 7.20 விழுக்காடாக உயர்த்தியுள்ளது எஸ்பிஐ வங்கி. புதிய வட்டி விகிதம் மே 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கடன் செலுத்துவோருக்கான EMI உயரும். இதனால், EMI செலுத்துவோருக்கு மாதந்தோறும், கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது.
யாருக்கு பாதிப்பு (To whom vulnerability)
வீட்டுக் கடன், பெர்சனல் கடன், வாகன கடன் போன்ற கடன்களை வாங்கியோருக்கு EMI உயரும். ஏற்கெனவே கடன் வாங்கியவர்கள், புதிதாக கடன் வாங்குவோர் இருதரப்பினருக்கும் EMI பொருந்தும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், அண்மையில் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40% ஆக உயர்த்தியுள்ளது.
காரணம் என்ன? (What is the reason?)
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பணவீக்கம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டியை உயர்த்தியது.
ரெப்போ வட்டி
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி எனப்படுகிறது. ரெப்போ வட்டி உயர்த்தப்படும்போது கடன்களுக்கான EMI உயரும். அதேபோல ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதமும் உயரும்.
மேலும் படிக்க...
மழையால் உச்சம் தொட்டத் தக்காளி- கிலோ ரூ.75!
குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!
Share your comments