நம்முடைய முதலீட்டு தொகுப்பில் நமக்குத் தெரியாமல் கசிவுகள் அல்லது இடைவெளிகள் இருக்கலாம். இவை முதலீட்டின் பலனை பாதிக்கலாம். இத்தகைய நிதி கசிவுகள், இடர்தன்மை இடைவெளி அல்லது அதிக வரி என பலவித வடிவங்களில் இருக்கலாம். இத்தகைய கசிவுகளையும், இடைவெளிகளையும் கண்டறிந்து சரி செய்வது எப்படி என பார்க்கலாம்.
வரி சேமிப்பு (Tax Saving)
வரி சேமிப்பிற்காக மேற்கொள்ளும் பொருத்தமில்லா முதலீடுகள், நிதி கசிவாக அமையலாம். வரி சேமிப்பு முதலீடுகள், செயல்திறன் மிக்கவையாகவும் இருப்பது அவசியம். உதாரணமாக, வரி சேமிப்புக்கான வைப்பு நிதி முதலீடு, பணவீக்கத்தின் தாக்கத்தால், எதிர்மறையான பலனையே அளிக்கும். எனில் பொருத்தமான மாற்று முதலீடுகளை நாட வேண்டும்.
கவனம் தேவை (Be Careful)
முதலீடுகள் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இல்லாமல் போனால், சரியாக முடிவெடுப்பதை தவறவிடலாம் அல்லது தவறான முடிவுகளை மேற்கொள்ளலாம். சந்தை போக்கால், முதலீட்டை அவசரமாக விலக்கி கொள்வதும் தவறு. உரிய பயன் தராத முதலீட்டை தொடர்வதும் இழப்பை உண்டாக்கும்.
இடர் தன்மை (Risk character)
முதலீட்டாளர்கள் இடர் தன்மையையும் கவனிக்க வேண்டும். முதலீடுகளின் இடர் தன்மை காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. சந்தை போக்கால், கடன்சாரா நிதிகள் இடர் தன்மை அதிகமாகலாம். எனவே இடர் தன்மையை அலசி ஆராய்ந்து அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
பணமாக்கல் (Monetization)
முதலீடு தொடர்பான பணமாக்கல் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு அல்லது பலனில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் போது முதலீட்டின் பணமாக்கும் தன்மையை தவறவிடலாம். இது தேவையான போது பணத்தை எடுக்க முடியாமல் இழப்பை ஏற்படுத்தும்.
முதலீடு செலவு (Investment)
முதலீடு தொடர்பான செலவுகளும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக கட்டணம் கொண்ட முதலீடுகளை தவிர்க்க வேண்டும், ஒரு சில முதலீடுகள் மறைமுக செலவுகளை கொண்டிருக்கும். அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலீடு நோக்கிலான காப்பீடு திட்டங்கள் இவ்விதம் அமையலாம்.
மேலும் படிக்க
புதிய வாகனம் வாங்கும்போதே நாமினி நியமனம்: புதிய சட்டத்திருத்தம்!
இன்று தங்கப் பத்திரம் வெளியீடு: கிராம் 5,109 ரூபாயாக நிர்ணயம்!
Share your comments