1. மற்றவை

ஒரு மணி நேர உழைப்பு, 5 ஆயிரம் வருமானம்- அசத்தல் Business!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Low Investment, Few Hours Work- Huge income!

சிறுகச் சிறுகச் சேமித்தால், நம்முடைய இலக்கை எளிதில் அடைய முடியும். அப்படிசிறுதொழில் முனைவோராக மாற உங்களுக்கு விருப்பமா? அப்படி உங்களுக்கு விருப்பம் இருந்தால், உணவு சார்ந்த தொழில்கள் எப்போதுமே கைகொடுக்கும். குறிப்பாக நகரங்களைத் தேர்வு செய்து இந்தத் தொழிலைச் செய்ய முன்வந்தால், நீங்கள் சில வருடங்களில், பணக்காரர் ஆகலாம்.

ஏனெனில் நாக்கு, விதவிதமான ருசியை எதிர்பார்க்கும். அப்படி எண்ணம் உள்ளவர்களைக் கவர உணவுத்தொழில் நிச்சயம் பயன்படும். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுவகைகளில் சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு முக்கிய இடம் உண்டு. எனவே இந்த வியாபாரத்தைக் கையில் எடுக்கலாம்.

ரொட்டி தயாரிப்பு மிஷின் (Roti prepare Machine)

இந்த மிஷினில் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் ரொட்டி அல்லது சப்பாத்திகளைத் தயாரிக்க முடியும். அதேபோல் பிரட்டும் தயாரிக்கலாம். இதனுடன் கட்டிங் மிஷினும் வாங்க வேண்டும். ஆக மொத்தம் தயாரிப்பு மற்றும் கட்டிங் மிஷின்களுக்கென 2.15 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும்.

தேவையான பொருட்கள் (Ingredients)

ரொட்டி தயாரிக்க மைதாமாவு, தண்ணீர்,உப்பு இவை இரண்டும்தான் தேவை. சப்பாத்திக்கு கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். மார்க்கெட்களில் நல்ல தரமான மைதா அல்லது கோதுமை மாவை கொள்முதல் செய்து கொள்வது நல்லது.

செய்முறை

  • மாவுடன் தண்ணீருடன் சேர்த்து பதமாக பிசையவும். பின்னர் தேவைப்படும் அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

  • இதை மிஷினில் போட்டி அடுத்த சில நிமிடங்களில் ரொட்டி தயாராகிவிடும். இதேபோல் கோதுமையைக் கொண்டு சப்பாத்திகளையும் தயாரிக்க முடியும்.

  • இந்த மிஷினில் இருவேறு வெப்பநிலையில், விதவிதமான சப்பாத்தி மற்றும் ரொட்டிகளைத் தயாரித்து அசத்தலாம்.

எங்கு விற்பனை செய்வது?

குறிப்பாக சூப்பர் மார்க்கெட், பலசரக்கு கடைகள் போன்றவற்றில் ரொட்டிக்கு ஆர்டர் (order) பெற்று விற்பனை செய்யலாம், அதேபோல், மருத்துவமனைகள், சான்வெட்ஜ் கடைகள் உள்ளிட்டவற்றிலும் பிரெம் மற்றும் சப்பாத்தி அமோகமாக விற்பனையாகும்.

இடம்தேர்வு (Place)

உங்கள் நிறுவனம் ரொட்டி தயாரிப்பு மிஷின்களை வைக்கும் இடவசதி உடையாக இருக்க வேண்டியது அவசியம்.

உரிமம் கட்டாயம் (License required)

உணவு தொடர்பானத் தொழிலைத் தொடங்குவதற்கு, இந்திய உணவு தர ஆணையமான FSSAI யிடம் உரிமம் பெற வேண்டியது கட்டாயம். அதனைத் தொடர்ந்து, சிறுதொழில் முனைவோர் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டும்.

முதலீடு

இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதலீடு தேவை. இதற்காக சிறுதொழில் தொடங்க பல வங்கிகள் கடன் அளிக்கின்றன.தகுந்த பொருட்களைக் கொண்டு சுத்தத்தில் எவ்வித சமரசமும் செய்யாமல், தரமான ரொட்டி மற்றும் சப்பாத்திகளைத் தயாரித்தால், விற்பனை களைகட்டும். இந்த மிஷினின் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் சப்பாத்தி அல்லது ரொட்டிகளைத் தயாரிக்க முடியும். அதனை தலா இரண்டு ரூபாய்க்கு விற்றால் கூட, ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டலாம். தினமும் சில மணி நேரம் உழைத்தால், ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க...

நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!

அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!

English Summary: Low Investment, Few Hours Work- Huge income! Published on: 21 March 2022, 09:03 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.