ஸ்பெயினில் பெற்றோரையும் 10 வயது சகோதரனையும் 15 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் அந்த சிறுவன் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அதனை பெற்றோர் தட்டிக்கேட்டபோது இந்தக் குற்றம் அறங்கேரியிருக்கிறது.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை, குழந்தைகள் துப்பாக்கிச்சூடு நடத்துவது வாடிக்கைதான். அங்கெல்லாம் பெரும்பாலானப் பெற்றோர், தற்காப்புக்காக அரசிடம் உரிமை பெற்றுத் துப்பாக்கிகளை வைத்துக்கொள்வது வழக்கம். அவ்வாறு பாதுகாப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கியே சிலருக்கு மரணத்தைப் பரிசளிக்கும் எந்திரமாக மாறிவிடுகிறது.
அந்த வகையில் சிறுவன் ஒருவன், குறைந்த மதிப்பெண் பெற்றதைத் தட்டிக்கேட்ட தாய், தந்தை, சகோதரன் ஆகியோரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தென்கிழக்கு துறைமுக நகரமான அலிகாண்டேவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இறந்த பெண்ணின் சகோதரி அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது சகோதரி, கணவர் மற்றும் 10 வயது குழந்தை என அனைவரும் இறந்து கிடந்துள்ளனர்.அவர்களது 15 வயது மகன் மட்டும் உயிருடன் இருந்துள்ளான். அந்த சிறுவன் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரனைக் கொன்றதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளான். இதையடுத்து அந்த பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 நாட்களாக சடலங்களுடன் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் சிறுவன், பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் அதனால் அவனது தாயுடன் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளான்.
கொலைகாரச் சிறுவன்
அதன் பிறகு அவனுடைய தந்தையின் வேட்டையாடும் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவனது தாய், சகோதரன், தந்தை என 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளான்.15 வயதுச் சிறுவனின் இந்த கொடூரச் செயல், அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments