தியாகிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:- இலவச திட்டங்கள் பட்ஜெட்டில் நமது நிதியாதாரம், செலவு, கடன் குறித்து விளக்கியுள்ளோம். இருக்கின்ற வருவாயை வைத்து இலவச திட்டங்களை கொடுக்க முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
மடிக்கணினி
அரசு எல்லா திட்டங்களையும் கண்டிப்பாக செயல்படுத்தும். பிரதமர் சொன்னதுபோல் 'பெஸ்ட்' புதுச்சேரியை உருவாக்குவோம். மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட சைக்கிள், மடிக்கணினி திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்தப்படும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் முழுமையான பலன் மக்களுக்கு கிடைக்கும்.
மனநிலை
திட்டங்களை செயல்படுத்துவதிலும், பணிகளை விரைந்து முடிப்பதிலும் காலதாமதங்கள் ஏற்படுகிறது. இதனை நாம் மறுக்க முடியாது.
எம்.எல்.ஏ.க்கள் மக்களின் மனநிலைக்கு ஏற்ப தான் இங்கு செயல்படுகின்றனர். மக்களின் எண்ணத்தையே பிரதிபலிக்கின்றனர்.
அதனால் அரசு செயலாளர்கள் மக்களுடைய மனநிலை அறிந்து விரைந்து செயலாற்ற வேண்டும். காலத்தோடு எதை செய்தாலும் சரியாக செய்ய முடியும். நம்முடைய எண்ணங்களுக்கு ஏற்ப விரைவாக பணிகள் இருக்கவேண்டும். ஹட்கோ, நபார்டு வங்கிகளில் கடன் வாங்க செல்லும்போது காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைகள் ஏற்படாமல் விரைவாக செயலாற்ற வேண்டும்.
ரூ.1,000
ரூ.1,000 உயர்வு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பென்ஷன் தொகை ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும். (தற்போது மாதம் ரூ.10,000 வழங்கப்பட்டு வருகிறது). மேலும் 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டாவும் வழங்கப்படும். மத்திய அரசிடம் நமக்கு தேவையான நிதியை கேட்டுள்ளோம். மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு 60 சதவீத நிதியை தருகிறார்கள். அதை 100 சதவீதமாக வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும் மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரம் கோடி புதுவை மாநிலத்துக்கு தரவேண்டும் என்று கேட்டுள்ளேன். குறைந்தது ரூ.800 கோடியாவது தேவை என்று கூறியுள்ளேன்.
மாநில அரசின் கடன்தொகை ரூ.10ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு 5 ஆண்டுகள் அசல், வட்டி செலுத்தாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையாக கடனை தள்ளுபடி செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments