இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான, 'மாருதி சுசூகி' பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு எனும் சி.என்.ஜி., ஆகிய இரு வகையான எரிபொருட்கள் வாயிலாக இயக்கப்படும், புதிய எஸ்-பிரஸ்சோ எஸ்-- - சி.என்.ஜி., எனும் காரை, சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எல்.எக்ஸ்.ஐ., மற்றும் வி.எக்ஸ்.ஐ., என இரு ரகங்களில், இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது.
மாருதி கார் (Maruti Car)
எரிவாயு செலவை குறைப்பதற்காகவே, இந்த காரில் மாருதியின் பிரத்யேக, '1 லிட்டர் நெக்ஸ்ட் ஜென் கே - சீரிஸ் டுயல் ஜெட் இன்ஜின்' பொருத்தப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சி.என்.ஜி., எரிவாயுவை பயன்படுத்துவதற்கென, அதிநவீன எஸ்-.சி.என்.ஜி., தொழில் நுட்பமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கார், 1 கிலோ சி.என்.ஜி., எரிவாயுவில், கிட்டத்தட்ட 32.73 கிலோ மீட்டர் வரை செல்லும் திறனுடையது என மாருதி தெரிவித்துள்ளது.
மற்றபடி, பெட்ரோல் எஸ்-பிரஸ்சோ காருக்கும், இந்த புதிய காருக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. ரகத்தை பொறுத்து, இந்த காரின் விலை, 5.9 லட்சம் ரூபாய் மற்றும் 6.10 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு வரப்போகுது சூப்பரான வசதி: கட்டணம் இல்லாமல் இனி ரயில் டிக்கெட்!
100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!
Share your comments