செவ்வாய்கிழமை IPL 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களின் தக்கவைப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அதாவது தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்படும் CSK-வில் மீண்டும் மகேந்திர சிங் தோனி மற்றும் ஜடேஜா போன்ற மூத்த வீரர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
அப்படிப்பட்ட நிலையில், இந்த முறை கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த எம்.எஸ்.தோனி. இம்முறை இவரா, அவரா என்ற கேள்விக்கு விடை வந்துவிட்டது. இம்முறை CSK கேப்டன் நம்ம தல எம்.எஸ்.தோனி தான் என்பதே இதற்கான பதிலாகும்.
மறுப்புறம், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஜியோ சினிமாவுடன் பேசுகையில், CSK-வின் எதிர்காலம் குறித்து பேசினார், மேலும் எம்எஸ் தோனி இருக்கும் வரை வேறு யாரும் அணியின் கேப்டனாக இருக்க மாட்டார்கள் என்று கூறினார்.
தோனி விளையாடும் வரை, வேறு கேப்டன் இருக்க முடியாது, கடந்த ஆண்டு தெளிவாகத் தெரிந்தது. அதைச் சொல்லி, இந்த கேள்வியை ஒரு வருடத்திற்கு முன்பு என்னிடம் கேட்டியிருந்தால், எனது பதில் வேறு மாதிரியாக இருந்திருக்கும். என கூறிய அவர்,
"ஒருவேளை கேன் வில்லியம்சன் அடுத்த கேப்டனாக இருந்திருக்கலாம், ஆனால் CSK பற்றி எனக்குத் தெரிந்த வரை, இது எம்.எஸ் தோனியின் கடைசி ஆண்டாக இருப்பின், அடுத்த 5-6 வருடங்களுக்கு, அந்த பாத்திரத்தை கையாளக்கூடிய ஒருவரிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என விரும்புகிறேன்". CSK அணி பொதுவாக மாற்றத்தை நம்பாத அணியாக இருப்பதால். இவ் அணிக்கு நீண்ட காலம் நீடிக்கும் கேப்டன்-க்கான தேடல் இருந்து வருகிறது. CSK டிம் ஒரு ப்ளூ சிப் டிமா் ஆகும், இந்த டிம்-மின் பலமே, இதன் பிரபல தன்மைதான். என்று முடித்தார். ஓஜா.
எத்தனை முறை csk ஐபிஎல் வென்றது? (How many times csk won IPL?)
இதுவரை CSK நான்கு முறை வெற்றி கணியை ரூசித்துள்ளது. 2010 மற்றும் 2011 என தொடரந்து இருமுறையும், 2018 மற்றும் 2021 என அடுத்த இடைவெளியில் CSK டிம் வெற்றியைக்கண்டுள்ளது. மேலும், 2013, 2012, 2008-இல் CSK இரண்டாம் நிலையை வகித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Share your comments