1. மற்றவை

NASA: பூமிக்கு ஆபத்து! 18,000 மைல் வேகத்தில் பூமியை கடக்கும் சிறுகோள்.

T. Vigneshwaran
T. Vigneshwaran
‘2008 Go20’ Asteroid-NASA

ஜூலை 24ஆம் தேதி, நாளை பூமியை சிறுகோள் ஒன்று கடக்க போவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதன் அளவு தாஜ்மஹாலை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கு ‘2008 Go20’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது மணிக்கு 18,000 மைல் வேகத்தில் பூமியை கடக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி வரும் 24ஆம் தேதி அன்று அதாவது நாளை நள்ளிரவு 1 மணி அளவில் இந்த சிறுகோள் பூமியை கடக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இதன் நகர்வை நாசா தொடர்ந்து பார்த்து வருகிறது.

பூமிக்கு ஆபத்தா?

‘2008 Go20’ என்ற இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்டது. இந்த கோள் வேகமாக நகர்ந்து வருவதால், அதன் பாதையின் குறுக்கே எது வந்தாலும் திமிசமாக்கப்படும். 287 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பறந்து வருகிறது. அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவை போன்று 8 மடங்காகும். எனவே, இந்த சிறுகோள், பூமியைக் கடந்து பாதுகாப்பாக நகர்ந்து செல்லும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

எனவே, இந்த ‘2008 Go20’ என்ற இந்த சிறுகோள் பூமிக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தை சுற்றி நிறைய சிறுகோள்கள் சுழன்று வருகின்றன. கோள்கள் உருவாக்கத்திலிருந்து எஞ்சியவையே சிறுகோள்கள் என்று அறியப்படுகிறது.

அரிய வானியல் நிகழ்வு அல்ல

இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவது, ஒரு அரிய வானியல் நிகழ்வு அல்ல.இந்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி ‘2008 GO20’ கடந்து சென்ற பிறகு, 2021ல் ‘2020 BW12’ மற்றும் ‘2019 YM6’ என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகோள்களும் பூமிக்கு அருகில் இருந்து பறந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் மண் மாதிரிகள்

இதன் போதிலும், செவ்வாய் கிரகத்திலிருந்து மண் மாதிரிகளை பெர்சவரன்ஸ் விண்கலம் மூலம் சேகரிக்கும் பணி அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

இறந்தவர்களின் ஆதார்-பான், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை என்ன செய்வது?

உலகின் மிக விலையுயர்ந்த பழங்களின் விவரங்கள் இதோ!!

100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் விரைவில் உயர்த்தப்படும்- தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: NASA: Danger to Earth! Asteroid crossing the Earth at a speed of 18,000 miles Published on: 23 July 2021, 10:50 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.