கடந்த சில ஆண்டுகளில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தங்க நகைகளின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை எகிறிக் கொண்டே செல்கிறது.
தங்க சேமிப்புத் திட்டம் (Gold Savings Scheme)
நடுத்தர மக்கள் மொத்தமாக அவ்வளவு பணத்தைப் புரட்டி தங்கள் மகளின் திருமணத்திற்கு நகை சேர்ப்பது என்பது இன்றுள்ள காலத்தில் இயலாத ஒன்றாக உள்ளது. அப்படியிருக்கக் குறைந்த முதலீட்டில் அவர்களுக்கென மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கோல்ட் ஃபண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் ரூ.500 முதல் அத்திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
அதில் ஈடிஎஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நாம் எதிர்பார்த்ததைவிட நல்ல லாபம் காணலாம். சமீபத்தில் எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுள் கோல்ட், சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்டை (Edelweiss Gold and Silver ETF Fund of Fund) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் அவை சந்தா செலுத்துகைக்காக திறக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7 அன்று சந்தா செலுத்துகைகான கடைசி நாளாக அறிவித்துள்ளது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
செப்டம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு!
ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!
Share your comments