மே மாதம் முதல் ஜூலை வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 7 லட்சம் நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று கடந்த மே மாதம் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். திமுக தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 7,19,895 நபர்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் 1,26,414 விண்ணப்பங்களும், ஜூன் மாதம் 1,57,497 விண்ணப்பங்களும், ஜூலை மாதத்தில் 2,61,529 விண்ணப்பங்களும் வந்துள்ளது.
அதில், 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கவும் பட்டது. மேலும், 3,38,512 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைத்துள்ளதாகவும், 1,13,676 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 1,31,977 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும்,உணவு வழங்கல் துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.
சென்னை மாவட்டத்தை பற்றி பேசுகையில், தென் சென்னையில் கடந்த 3 மாதங்களில் 49,920 நபர்கள் விண்ணப்பித்ததில், 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கபட்டத்து.
மேலும், 15687 நபர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டதோடு, 2041 நபர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வட சென்னையில், 41431 நபர்கள் விண்ணப்பித்ததில், 16608 விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அதில்,15054 நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1554 நபர்களுக்கு அச்சிடும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 3 மாதங்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 43,647 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 38,295 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், 15687 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு, 2041 நபர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Ration card: அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றமா?
Share your comments