நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021 இல் திரு. தியாகராஜன் அவர்கள் பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் இதோ.
1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்ய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும்மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கி அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் உரையில், நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு அதன் ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ஆக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்
- 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும், ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் துவங்கப்படும்.
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைப்பு செய்யப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் சீரமைக்கப்படும்.
- மகளிர், மாற்றுத்திறனாளிகளின் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம் வழங்கப்படும். இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1303 ஆக அதிகரிக்கப்படும்.
- உயர்கல்விக்காக ரூ.5,369.09 கோடி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். ரூ.32599 கோடி பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
- ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கி அரசு சமாளிக்கிறது, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது என்றும் ரூ.19872 கோடி மின்சாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க:
Share your comments