இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் தான் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC). இது
இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 81 சதவிகிதமும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77 சதவிகிதமும் பங்களிக்கிறது. இந்தியாவில் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்களில், இந்நிறுவனமும் ஒன்றாகும்.
அப்ரண்டிஸ் பயிற்சி (Apprentice Training)
3614 அப்ரண்டிஸ் பயிற்சிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ONGC அறிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) நிறுவனத்தில், வருடந்தோறும் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு நடத்தப்படும். அவ்வகையில், சட்டம் 1961ன் கீழ் இந்த ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிக்கு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தமாக 3614 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில், விண்ணப்பப் பதிவும் அன்றைய தினத்தின் காலை 11 மணி முதலே தொடங்கி விட்டது.
முக்கிய தகவல்கள் (Important Informations)
அப்ரண்டிஸ் பயிற்சிக்கான மொத்த காலிப் பணியிடங்கள் : 3614
வயது வரம்பு : மே 15, 2022 தேதியின் படி 18 முதல் 24 வயதுக்குள்ளாக இருத்தல் அவசியம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : மே 15, 2022 மாலை 6:00 மணி வரைக்கும்.
முடிவுகள் வெளியாகும் தேதி : 23 மே 2022.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதித்தேர்வு மற்றும் பெறப்படும் மெரிட் முதலியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அபரணடிஸ் பயிற்சிக்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தகுதி மற்றும் சம்பளம் குறித்த மேலும் விவரங்களை, ஓஎன்ஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான ongcindia.com தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் ongcindia.com இணைய தளத்திலேயே இணைய வழியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க
Share your comments