நாடு முழுவதும் 1.56 லட்சம் தபால் நிலையங்கள் செயல்பட்டாலும், புதிய தபால் நிலையங்களின் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அந்த வகையில்,குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், தபால் துறை உங்களுக்கு அரிய வாய்ப்பை அளிக்கிறது. கிராம மற்றும் நகர்புறங்களில் தபால் நிலையத்தின் கிளைகளை நீங்கள் தொடங்க முடியும்.
அஞ்சல்துறை வழங்கும் இந்த ஃபிரான்ச்சைஸ் ஸ்கீம் இரு வகை உரிமைகளை வழங்குகிறது.
-
தபால் சேவைகளை வழங்குவதற்கான நிலையம் அமைக்கும் உரிமை.
-
அஞ்சல் முகவர் உரிமை. வீடு வீடாக அஞ்சல் முத்திரைகள் மற்றும்
-
எழுதுபொருட்களை வழங்கும் முகவர்கள் இந்த உரிமையை பெறலாம்.
முதலீடு
இந்த உரிமைகளைப்பெற ரூ.5000 பாதுகாப்புக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தகுதி
-
இந்த இரண்டு உரிமைகளையும் பெற நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
-
8-ம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
-
தபால் அலுவலக உரிமையை பெறுவதன் மூலம் நீங்கள் கமிஷன் முறையில் வருமானம் ஈட்டலாம்.
கூடுதல் கமிஷன்
மாதத்திற்கு ஆயிரத்திற்கும் மேலாக நீங்கள் பதிவுசெய்யப்பட்ட மற்றும் அதிவேக தபால்கள் புக் செய்யும் இலக்கை அடைந்தால் கூடுதலாக 20% கமிஷனை பெற முடியும். தபால்தலை மற்றும் அஞ்சல் தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 5 % கமிஷனை ஈட்ட முடியும்.
கமிஷன்
மாத வியாபாரத் தொகை அதிவேக தபால் கமிஷன் பதிவு செய்யப்பட்ட தபால் கமிஷன்
ரூ. 5 லட்சம் வரை 10 % 7%
ரூ. 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை 15% 10%
ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை 20% 13%
ரூ. 1 கோடி முதல் ரூ.5 கோடி வரை 25% 16%
ரூ.5 கோடிக்கு மேல் 30% 20%
விண்ணப்பிப்பது எப்படி?
தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வியாபார திட்டத்தை விவரிக்கும் தகவல்களை இத்துடன் இணைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர் தபால் துறையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சம்பர்பிக்கபட்ட 14 நாட்களுக்குள் தகுதியான நபர்கள் குறிப்பிட்ட மண்டலத் தலைவர்களால் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் படிக்க...
Share your comments