பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் வித்வா பென்சன் யோஜனா. விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வந்தாலும் இதற்கான பென்சன் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவைப் பெண்களுக்கு பென்சன் கிடைக்கும்.
விதவை பென்சன் (Widow Pension)
18 முதல் 60 வயது வரை உள்ள விதவை பெண்களுக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்கும். கணவனை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க சில தகுதிகள் உள்ளன. முதலாவதாக, இந்தத் திட்டம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு மட்டுமே. வேறு எந்த ஓய்வூதியத் திட்டத்தையும் பயன்படுத்தாத பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது.
விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, கணவரின் இறப்புச் சான்றிதழ், மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிட சான்றிதழ், வங்கி கணக்கு பாஸ்புக், வயது சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக உள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும். விதவை பென்சன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், விதவை பென்சன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பென்ச வழங்கப்படுகிறது.
மற்ற மாநிலங்களில்
விதவைப் பெண்களுக்கு ஹரியானா அரசால் ஒவ்வொரு மாதமும் ரூ.2,250 பென்சன் வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விதவைப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதம் 300 ரூபாய் பென்சன் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.900, டெல்லியில் ரூ.2,500, ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.750, உத்தராகண்டில் ரூ.1,200, குஜராத்தில் ரூ.1,250 பென்சன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு கமிஷன் தருவது போன்ற சிரமங்களும் இத்திட்டத்தில் இல்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், பயனாளி 21 வயதைத் தாண்டியிருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். பிச்சை எடுக்கும் நபராக இருக்கக் கூடாது. அவரது பெயரில் 5000 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட சொத்து இருக்கக் கூடாது. இத்திட்டத்தில் விண்ணப்பித்தவருக்கு மறுமணம் ஆகிவிட்டால் பென்சன் கிடைக்காது.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: பனிக்காலத்தில் இனி இந்தப் பிரச்சினையே இருக்காது!
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: ஓலை, கூரை வீடுகள் கணக்கெடுப்பு!
Share your comments