ஓய்வூதியம் பெறுவதற்கான சம்பள வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதில் நல்ல முடிவு எடுக்கப்பட்டால், ஓய்வூதியம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (பிஎஃப்) ஊழியர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான சம்பள வரம்பு தற்போது 15,000 ரூபாயாக உள்ளது. அதை 21,000 ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்துவது குறித்த ஆலோசனையில் பிஎஃப் அமைப்பு ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு செலவாகும்?
முதல் ஓய்வூதிய சம்பள வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. இது 2014 செப்டம்பர் மாதத்தில்தான் 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதிலிருந்து இதுநாள் வரை மாற்றம் செய்யப்படவில்லை. ஒருவேளை ஓய்வூதிய சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால் இன்னும் நிறையப் பேர் இந்த அமைப்புக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த நடவடிக்கையால் அரசுக்கு ரூ.6,750 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம்
ஓய்வூதியத் தொகைக்கான சம்பள வரம்பு மட்டுமல்லாமல், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையையும் உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பிஎஃப் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்சன் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்த முடிவை அரசு விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வயது வரம்பு
ஊழியர்களுக்கான பென்சன் உயர்த்தப்பட வேண்டும் என்பதோடு, ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் மத்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன், யுனிவர்சல் பென்சன் சிஸ்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு முன்மொழிந்துள்ளது.
மேலும் படிக்க...
நீட் தேர்வு- விண்ணப்பிக்கும் காலக்கெடு மே 15ம் தேதி வரை நீட்டிப்பு!
தரித்திரம் தொற்றிக்கொள்ளும் செடிகள்- இவற்றை வளர்க்க வேண்டாம்!
Share your comments