1. மற்றவை

PF கணக்கை மாற்றும் வழிமுறைகள்: தெரிந்து கொள்ளுங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
PF Account

இந்தியாவில் PF கணக்கு வைத்துள்ள ஊழியர்கள் மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது தனது PF கணக்கையும் அந்த நிறுவனத்திற்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

பிஎஃப் கணக்கு (PF Account)

இந்தியாவில் நிறுவனத்தின் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் PF கணக்கு தொடங்கப்படுகிறது. இதில் ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகைக்கு அரசு சார்பில் இருந்து வட்டியும் அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024 மத்திய பட்ஜெட்டில் PF கணக்கிலிருந்து 5 ஆண்டு முடிவடைவதற்குள் எடுக்கப்படும் பணத்திற்கு வட்டி விகிதம் 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பான் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் PF கணக்கில் இருந்து திரும்பப் பெறும் தொகைக்கு TDS விதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினால் உங்களது PF கணக்கையும் புதிய நிறுவனத்திற்கு நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் எளிதாக மாற்றலாம். அதற்கான வழிமுறைகள் கீழ்வருமாறு.

PF கணக்கை மாற்றும் முறைகள் :

  • முதலில் PF link என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் UAN எண் மற்றும் PassWord – டை உள்ளிட்ட வேண்டும்.
  • அடுத்ததாக “Online Services” என்பதை கிளிக் செய்து ,”One Member- One EPF Account (Transfer Request” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் புதிய நிறுவனத்தின் EPF கணக்கின் விவரங்களை உள்ளிட வேண்டும். பிறகு “Get Details” என்பதைக் கிளிக் செய்து PF கணக்கின் விவரங்களை சரிபார்க்கவும்.
  • மேற்கண்ட செயல்முறைகளை முடித்த பிறகு EPF கணக்கு பரிமாற்றம் முடிவடைய 30 முதல் 45 நாட்கள் ஆகும்.
  • உங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கணக்கு பரிமாற்ற நிலையை கண்காணிக்கலாம்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் இவர்களுக்கு மட்டும் பழைய பென்சன் திட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: TDS 20% ஆக குறைவு!

English Summary: PF Account Transfer Procedures: Know! Published on: 14 February 2023, 01:38 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.