தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கி வருகிறது. தற்போது இந்த PF தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
PF வட்டி உயர்வு (PF Interest hike)
இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இதையடுத்து EPFO நிறுவனத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியானது பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கின் கீழ் சேமிக்கப்படும். இந்த PF தொகைக்கு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் ஓய்வு பெறும் போது நீங்கள் சேமித்த பணமும் வட்டி பணமும் கிடைக்கும். இந்த தொகையானது முதிர்வு காலத்தில் உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
PF வட்டி விகிதமானது ஈபிஎஃப் முதலீடுகளில் இருந்து ஈபிஎஃப் பெறும் வருமானத்தைப் பொறுத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சிறுசேமிப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான PF தொகைக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவுப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கான PF தொகைக்கான வட்டி விகிதமானது 7.1% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான PF தொகைக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தேதியை அறிவித்த மாநில அரசு!
பென்சன் காலத்தில் உங்களுக்கு உதவும் தங்க சேமிப்புத் திட்டம்: பல லட்சங்களில் இலாபம்!
Share your comments