பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சில முக்கியமான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி அவசரத் தேவைக்கு நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு முதலீடு செய்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிஸ்க் எடுக்காமல், நம் பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி ( PPF) என்பது சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய உகந்த திட்டமாகும். இதில் குறைந்த தொகையில் முதலீட்டைத் தொடங்கி, ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.
7.10% வட்டி
உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம். பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் தற்போது 7.10 சதவீதமாக இருக்கிறது.
பிபிஎஃப் தொடர்பான விதிமுறைகளை கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன்படி, PPF கணக்கில் ரூ.50 மடங்குகளில் முதலீடு செய்வது அவசியம். இந்தத் தொகை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் பிபிஎஃப் கணக்கில், முழு நிதியாண்டிலும் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில் மட்டுமே வரி விலக்கு பலன் கிடைக்கும். இது தவிர, மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பிபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
கடன் வட்டிக் குறைப்பு
PPF கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் நீங்கள் கடன் பெறலாம். இதற்கு வட்டி செலுத்த வேண்டும். தற்போது இதற்கான வட்டி விகிதம் 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடனின் அசல் தொகையை செலுத்திய பிறகு, நீங்கள் இரண்டு தவணைகளுக்கு மேல் வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வட்டி கணக்கிடப்படுகிறது.
பிபிஎஃப் கணக்கைத் தொடங்க படிவம் ஏ-க்கு பதிலாக, படிவம்-1 சமர்ப்பிக்கப்பட வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் கணக்கை நீட்டிக்க, முதிர்வுக்கு ஒரு வருடம் முன்பு, படிவம் Hக்குப் பதிலாக படிவம்-4 இல் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க...
Share your comments