நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன் வர்ஷா திட்டம் குறித்து இந்த பதிவில் காண்போம்.
தன் வர்ஷா
இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டு எல்ஐசி நிறுவனம் இயங்கி வருகிறது. எல்ஐசி நிறுவனம் தொடங்கி கிட்டத்தட்ட 66 ஆண்டுகளை நிறைவு அடைந்துள்ளது. 2021 – 22 ஆம் நிதியாண்டில் மட்டும் எல்ஐசி 2.17 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய காப்பீட்டு திட்டங்களை எல்ஐசி அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன் வர்ஷா திட்டத்தில் 10 மடங்கு வரை வருவாய் வழங்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட காப்பீடு திட்டமாக உள்ளது. இந்த பாலிசி ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கும். இதன் நன்மை என்னவென்றால் இது சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டமாக உள்ளது. மற்றொன்று பாலிசிதாரர் இடையில் இறந்து விட்டால் முழு நிதி உதவியும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.
எல்ஐசி (LIC)
இந்த காப்பீட்டு திட்டத்தில் 10 அல்லது 15 ஆண்டு கால அளவுகள் உள்ளது. இதில் 15 வருடத்தை தேர்வு செய்தால் காப்பீடு வாங்குவதற்கான அதிகபட்ச வயது 60 ஆகும். மேலும் 10 ஆண்டு காலத்தை தேர்வு செய்யும் போது பாலிசிக்கான வயது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் கடன் மற்றும் காப்பீடு இரண்டையும் நீங்கள் பெறலாம். இதில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை போனஸ் பெற உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க
மீண்டும் பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.!
தினமும் 7 ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 5000 ரூபாய் பென்சன்!
Share your comments