இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் தங்களது பயணங்களுக்கு ரயில்களையே அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். வெகு தூரம் வேலைக்குச் செல்பவர்களுக்கும் சொந்த ஊர்களுக்குப் பயணிப்பவர்களுக்கும் சுற்றுலா செல்வதற்கும் ரயில்கள் பிரதான தேர்வாக உள்ளன. ரயில்களில் டிக்கெட் கட்டணமும் குறைவு; சீக்கிரமாகவும் பயணிக்க முடியும். நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. வழக்கமாக, ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், அவ்வளவு சீக்கிரம் கன்பார்ம் டிக்கெட் கிடைத்துவிடாது. ஆனால் இப்போது நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.
இரயில் பயணம் (Train Travel)
ரயிலில் ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால், அதைப் பற்றி இனி நீங்கள் உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம். உடனடியாக அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யவும் முடியும். அதற்கான வசதி வந்துள்ளது. IRCTC இன் இந்த புதிய சேவையைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். IRCTC தளத்தின் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, எல்லா ரயில்களிலும் இருக்கைகள் இருப்பதைக் காணலாம். இருக்கை காலியாக இருந்தால் முன்பதிவு செய்து, அது காலியாக இல்லை என்றால், அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் காத்திருப்பு டிக்கெட்டை எடுத்துக் கொள்வீர்கள். அதிக காத்திருப்பு இருந்தால், நீங்கள் முன்பதிவு செய்ய மாட்டீர்கள். உண்மையில், ரயிலில் எந்த இருக்கை காலியாக உள்ளது என்று தெரிந்துகொள்ளும் வசதி இதுவரை இல்லை.
புதிய வசதி (New Feature)
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், IRCTC இப்போது புதிய வசதியை பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. IRCTC புதிதாக புஷ் நோட்டிபிகேசன் வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும். IRCTC சமீபத்தில் தனது இணையதளத்தை அப்டேட் செய்துள்ளது. அதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தால், அதுகுறித்த அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் போனுக்கு தகவலாக அனுப்பப்படும். பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக, பயனர் முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று புஷ் நோட்டிபிகேசன் வசதியைப் பெற வேண்டும்.
நீங்கள் முன்பதிவு செய்யும் ரயிலில் ஏதேனும் ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு மொபைலில் ஒரு அறிவிப்பு வரும். இந்த SMS செய்தியில் ரயில் எண் பற்றிய தகவல்கள் இருக்கும். அதன் பிறகு நீங்கள் விரும்பினால், இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து உடனடியாக பயணம் செய்யலாம். நீங்கள் IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்யும்போது புஷ் நோட்டிபிகேசன் என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு இச்சேவை முற்றிலும் இலவசம். இதற்காக, IRCTCஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து, இந்தச் சேவையில் இணையவேண்டும்.
மேலும் படிக்க
தேசிய மருத்துவர்கள் தினம்: கடவுளுக்கு இணையான மருத்துவர்களை போற்றுவோம்!
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு நவீன கருவி: கோவை இரயில் நிலையத்தில் அறிமுகம்!
Share your comments