1. மற்றவை

மத்திய அரசு ஊழியர்கள் காட்டில் பண மழை- எகிருகிறது சம்பளம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rain of money for central government employees!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 39 சதவீதமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  இந்த விலைஉயர்வுக்கு பிறகு, சம்பளம் ரூ.5ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பிரச்சினை வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் சென்ற ஆண்டின் மத்தியில் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

5 சதவீத உயர்வு

பணவீக்க விகிதத்தைப் பொறுத்தே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இந்தியாவில் பணவீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது 5 சதவீதம் வரையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

39 சதவீதம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டால் 39 சதவீத அகவிலைப்படி கிடைக்கும்.

எவ்வளவு உயரும்?

ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒருவேளை 4 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 கொண்ட ஊழியர்களுக்கான சம்பளம் மாதத்துக்கு 720 ரூபாய் அதிகரிக்கும். அதாவது ஆண்டுக்கு 8640 ரூபாய்.

அதேபோல 25,000 ரூபாய் அகவிலைப்படி கொண்ட ஊழியர்களுக்கான சம்பளம் மாதத்துக்கு 1000 ரூபாயும், 50,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கு 2000 ரூபாயும் அதிகரிக்கும்.

ரூ.5000 உயர்வு

ஒருவேளை அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 கொண்டவர்களுக்கு 900 ரூபாயும், அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் கொண்டவர்களுக்கு 1250 ரூபாயும், அடிப்படை சம்பளம் 50,000 ரூபாய் கொண்டவர்களுக்கு 2500 ரூபாயும், ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொண்டவர்களுக்கு 5000 ரூபாயும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!

English Summary: Rain of money for central government employees! Published on: 04 July 2022, 09:57 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.