Krishi Jagran Tamil
Menu Close Menu

சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை: அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு

Monday, 23 September 2019 10:56 AM
Atmospheric overlap and convection in Tamil Nadu

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருகிற 30 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை முடிவடைய உள்ள  நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அநேக பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. 

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று சேலம், தருமபுரி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Heavy rains with Thunderstorm in chennai

சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை

நேற்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து  திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. காலை முதலே இடியுடன் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் 11 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 54 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இன்று அதிக பட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்ஸியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்ஸியஸ் பதிவாகக்கூடும்.  

இடி தாக்கி மரணம் 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.  பேரத்தூர் கிராமத்தில் இடி தாக்கி அன்னப்பூரணி என்ற பெண் உயிர் இழந்தார்.  மேலும் காயம் அடைந்த ஐந்து பேர் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவிடைமருதூர் சுற்று வட்டாரத்தில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இடி தாக்கிய அதிர்ச்சியில் 4 பெண்கள் மயக்கம் அடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி சுற்று வட்டாரத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி, நயினார்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், தாராபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.   

K.Sakthipriya
Krishi Jagran 

Rains for Next 2 days! Atmospheric Overlap Convection Thunderstorm Heavy rainfall Tamil Nadu Pondicherry
English Summary: Rains for Next 2 days! Due To Atmospheric Overlap and Convection Thunderstorm with Heavy Rainfall in Tamil Nadu and Pondicherry

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
  2. பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
  3. நீலகிரியில் கொட்டப்போகிறது அதி கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!
  4. கோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்!!
  5. மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!
  6. மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!
  7. பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!
  8. விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!
  9. மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!
  10. அதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்- விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.