1. மற்றவை

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: அதிக வட்டி அதிக ஆபத்து!

R. Balakrishnan
R. Balakrishnan
Reserve Bank warns

அதிக வட்டி கிடைக்கும், முதலீட்டுக்கு அதிகப் பணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது அதிக ஆபத்தானதாகவும் முடியலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி (RBI) கவர்னர் சக்தி காந்த தாஸ் எச்சரித்து உள்ளார்.

RBI எச்சரிக்கை (RBI Warns)

முதலீட்டாளர்கள் தொடர்பான கருத்தரங்கு டில்லியில் நேற்று நடந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பேசியதாவது: வங்கிகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் (Awareness) இருக்க வேண்டும். அதிக வட்டி கிடைக்கும் என கூறப்படும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிக வட்டி எப்போதும் அதிக ஆபத்தானது என்பது நம் அனுபவம்.

அதனால் அவ்வாறு கூறும் அமைப்புகள், நிறுவனங்கள் குறித்து முழுமையாக அறிந்து எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும். வங்கி துறை தற்போது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவதே காரணம். வங்கிகளும், ரிசர்வ் வங்கியும், அரசும் இணைந்து செயல்படும்போது கூட்டுப் பொறுப்பாக அமைந்து விடுகிறது.

பொருளாதார வளர்ச்சி (Economic Growth)

இந்தக் கொரோனா காலத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டதால் தான் நம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியும் முக்கிய காரணமாக அமைகிறது.

மேலும் படிக்க

மானியத்தில் 150 லட்சம் வரை கடன் - சிறப்பு தொழில் கடன் மேளா!

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அதிர்ஷ்டம்: லாட்டரியில் ஒரு கோடி பரிசு!

English Summary: Reserve Bank warns: Higher interest rates risk more! Published on: 13 December 2021, 05:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.