1. மற்றவை

அடுத்த 7 தினங்களுக்கும் மழை- ஹேப்பி நியூஸ் தந்த சென்னை வானிலை மையம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
RMC chennai says Chance of rain in Tamil Nadu for the next 7 days

கோடைக்காலம் முடிந்தது என கருதிய நிலையில் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்த நிலையில் சென்னை வானிலை மையம் சார்பில் அடுத்த 7 தினங்களுக்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியினை தந்துள்ளது. அதிகப்பட்சமாக மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் 5 செ.மீ மழையும், பெரியப்பட்டியில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. அதேப் போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக பாளையம்கோட்டையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த ஏழு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

16.08.2023 மற்றும் 17.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18.08.2023 முதல் 22.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: 16.08.2023 மற்றும் 17.08 2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 17.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வானிலை தொடர்பான விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் என சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

ரொம்ப நாளைக்கு பிறகு தங்க நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி!

நிலக்கடலை சாகுபடி- ஜிப்சம் இடுவதால் இவ்வளவு நன்மையா?

English Summary: RMC chennai says Chance of rain in Tamil Nadu for the next 7 days Published on: 16 August 2023, 02:56 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.