மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை அடுத்த மாதம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் 18 மாத நிலுவைத்தொகையை ஒரே செட்டில்மண்டாக அரசு வழங்க முன்வந்தால், ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த மாதம் அகவிலைப்படி உயர்வுடன் 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகையும் வரவிருக்கிறது. இதுகுறித்து அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் காத்திருப்பு
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அரசிடம் தங்களுக்கு உரிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். லட்சக்கணக்கான ஊழியர்களின் கணக்கில் நிலுவையில் உள்ள தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரூ.1.5லட்சம்
உண்மையில் 2020 ஜனவரி முதல் ஜூன் 2021 வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் மொத்தமாக ரூ.1.50 லட்சத்தை போட அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில் முடிவு
நிதியமைச்சகத்தின் பணியாளர் மற்றும் செலவினத் துறை (DOPT) அதிகாரிகளின் கூட்டு ஆலோசனைப் பொறிமுறையின் (JSM) கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில், ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவது குறித்து விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
5 சதவீதம் வரை
இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 34 சதவீத அகவிலைப்படி செயல்பாட்டில் இருக்கும் நிலையில் இன்னும் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க...
Share your comments