நோய் என்பது நம்மில் யாருக்கும், எப்போது வேண்டுமானாலும், நோய் தாக்கலாம். அப்படி நமக்குத் தீராத நோய் தாக்கியிருப்பது தெரியவந்தால், முதலில், மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, வந்த நோயை எதிர்கொள்ள முன்வரவேண்டும்.
அப்படி புற்றுநோயால் பாதிக்கப்படும் கேன்சர் நோயாளிகளுக்கு மாதம் 2500 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
நோயாளிகளுக்கும் பென்சன் (Pension for patients)
வழக்கமான பென்சன் திட்டங்கள் நிறைய இருக்கும் சூழலில் புது வகையான ஒரு பென்சன் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
அதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு உதவியாக இந்த பென்சன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பெயர் அடல் கேன்சர் பென்சன் திட்டம். ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் இதை அறிவித்துள்ளார்.
2500 ரூபாய்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாதம் 2500 ரூபாய் பென்சன் கிடைக்கும். கேன்சர் மட்டுமல்லாமல் தலசீமியா மற்றும் ஹீமோபிலியா ஆகிய வியாதிகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கும் இந்த பென்சன் தொகை கிடைக்கும்.
இலவச சிகிச்சை
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக சிறப்பு பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கீழ் இலவசமாகவே சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வசதிகள்
ஹரியானா மாநிலத்தில் கேன்சர் சிகிச்சை பெறுவதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து நிறையப் பேர் வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 28,000 பேர் வரை இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இதற்காகவே ரூ.72 கோடி செலவில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
எகிறும் EMI - எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!
குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!
Share your comments