1. மற்றவை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் - அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 25 lakh for central government employees - hits next jackpot!

மத்திய அரசு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கு அரசு தரப்பிலிருந்து 25லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்ட விரும்பினால், அவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களில் சலுகை (HBA - House Building Advance) வழங்கப்படுகிறது. இதில், பணியாளர் சொந்தமாகவோ, அல்லது மனைவியின் மனையிலோ வீடு கட்ட முன்பணம் எடுத்துக் கொள்ளலாம்.

2020ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடு கட்டும் சலுகைக்கான வட்டி விகிதத்தை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது . இதன் மூலம் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பயன் பெறமுடியும். அரசின் இந்த முடிவால் சொந்தமாக வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லாமல், பிளாட், வீடு வாங்குபவர்களுக்கும் அதன் பலன் கிடைக்கும். ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வட்டி விகிதம் 80 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

2023 மார்ச் 31 வரை இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீடு கட்டவோ அல்லது பிளாட், சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

விதிமுறை

வீடு கட்டுவதற்கு முன்பணம் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும், கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து இந்தத் தொகை உங்களுக்குக் கிடைக்கும். வங்கியில் திருப்பிச் செலுத்துவதற்கான முன்பணம் மொத்தமாக வழங்கப்படும். முன்பணத்தை வழங்கிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் பணியாளர்கள் (HBA Utilization Certificate) பயன்பாட்டுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கிக்கடன்

புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது பிளாட் வாங்குவதற்கோ முன்பு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கு வீடு கட்டும் முன்பண சலுகையைப் (HBA) பயன்படுத்திக் கொள்ளலாம். இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இந்த சலுகை நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் கிடைக்கும். ஆனால், தற்காலிக ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் பணி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய நாளிலிருந்து பணியாளர்களுக்கு வீடு கட்ட முன்பணம் கிடைக்கும்.

ரூ.25 லட்சம் வரை

இந்த சிறப்பு வசதியின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் 34 மாதங்கள் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து இந்த மதிப்பு அவரவருக்கு மாறுபடும்.

விரிவாக்கம் செய்ய

ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் விதிகளின்படி, வீட்டை விரிவாக்கம் செய்ய அல்லது புதுப்பிக்க மத்திய அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அல்லது 34 மாத அடிப்படை சம்பளம், வீட்டின் புதுப்பிப்பு அல்லது விரிவாக்கத்துக்கான செலவு அல்லது செலுத்தும் திறன் ஆகியவற்றை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். முதல் 15 ஆண்டுகளுக்கு நீங்கள் பிரின்சிபல் தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள ஐந்து ஆண்டுகளில் அதை வட்டியாக EMIயில் திருப்பி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

English Summary: Rs 25 lakh for central government employees - hits next jackpot! Published on: 19 April 2022, 11:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.