ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு, மத்திய அரசு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதைத் தவிர ஆதார் கார்டுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
விண்ணப்பிக்கும் லிங்க்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த செய்தியில், மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடனாக வழங்குகிறது எனவும், இந்தக் கடன் ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மூலம் மக்களுக்கு கடன் வழங்கி வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியுடன் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான இணைப்பும் (லிங்க்) கொடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்த வைரல் செய்தியை பத்திரிகை தகவல் அமைப்பின் (PIB ) உண்மை கண்டறியும் பிரிவு ஆய்வு செய்தபோது, அது பற்றிய உண்மையான தகவல் தெரியவந்துள்ளது.இந்த உண்மை கண்டறியும் சோதனையில், மத்திய அரசு அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த வைரல் செய்தி முற்றிலும் போலியானது.
எச்சரிக்கை
இதுபோன்ற மோசடிகளை நம்பி யாரும் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று PIB சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
போலியானது
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு 'PIB Fact Check' இதுபோன்ற தவறான செய்திகளை அனுப்புவதற்கு தடை விதித்துள்ளது. PIB Fact Check ஆதார் கடன் தொடர்பான இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசு விளக்கம்
அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.ஆதார் தொடர்பாக இதுபோன்ற போலியான செய்திகள் நிறைய பரவிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் ஆதார் கடன் தொடர்பான வதந்தி அதிகமாக உள்ளது. உண்மையில் ஆதார் கார்டுக்கு கடன் எதுவும் வழங்கப்படுவதில்லை.
சரிபார்ப்பு ஆவணம்
வங்கிக் கடன் விஷயத்தில் ஆதார் என்பது வெறும் சரிபார்ப்பு ஆவணம் மட்டுமே. கடன் கேட்பரின் பெயர், வயது, முகவரி போன்ற விவரங்களை சரிபார்க்கவே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. மொபைல் நம்பர் சரிபார்ப்பும் இதில் இருக்கும். ஆதார் கார்டு இருந்தால்தான் கடன் கிடைக்கும் என்று கூட வங்கிகள் கூறலாம். ஆனால் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே கடன் கிடைத்துவிடாது. வாடிக்கையாளரின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் போன்ற நிறைய விஷயங்கள் உள்ளன.
மேலும் படிக்க…
பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments