பணி ஓய்வுபெற்ற பின் நிலையான வருமானம் பெற வேண்டியது அவசியம். இதனால், பணத் தேவைகளுக்கு மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. ஆனால், ஓய்வுகால வருமானத்துக்கு பணி ஓய்வுபெற்ற பின் திட்டமிடுதல் கூடாது. இளம் பருவத்தில் இருந்தே ஓய்வுக்கால வருமானத்துக்கு முதலீடு செய்துவர வேண்டும். ஒரு எறும்பு மழைக்காலத்துக்கு தேவையான தானியங்களை எப்படி சேகரிக்கிறதோ அப்படி இளம் வயதில் இருந்தே சேமிப்பு, முதலீட்டை தொடங்க வேண்டும்.
ஓய்வூதியம் (Pension)
அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் தானாகவே வந்துவிடுகின்றன. ஆனால், தனியார் ஊழியர்கள் சுய விருப்பத்தின் பேரில் பென்சன் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு விரைவில் முதலீட்டை தொடங்குகிறோமோ அவ்வளவு வருமானம் அதிகரிக்கும்.
பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் தனியார் ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் (NPS) ஒரு நல்ல சாய்ஸ். இத்திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் தனியார் ஊழியர்களும் கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதால் ரிட்டயர்மெண்டுக்கு பின் பென்சன் வருமானம், வருமான வரி சலுகைகள் என பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. தேசிய பென்சன் திட்டத்தில் உரிய திட்டமிடலோடு முதலீடு செய்தால், பணி ஓய்வுக்கு பின் மாதம் 50,000 ரூபாய் கூட பென்சன் பெற முடியும்.
தேசிய பென்சன் திட்டத்தில் இளம் பருவத்தில் இருந்தே நீங்கள் முதலீடு செய்யும் தொகை பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். முதலீடு மெல்ல மெல்ல உயர்ந்து நீங்கள் பணி ஓய்வுபெறும்போது பெரும் தொகையாக மாறி இருக்கும். அதில் அதிகபட்சம் 60% வரை நீங்கள் எடுத்துக்கொண்டு மீதத் தொகையை வைத்து ஆண்டுத்தொகை (Annuity) வாங்க வேண்டும். அதன்படி, மீதத் தொகை வாயிலாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பென்சன் கிடைக்கும்.
தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கும், பணி ஓய்வுபெறும்போது எடுத்துக்கொள்ளும் தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு.
மேலும் படிக்க
பிக்சட் டெபாசிட்: வட்டியைப் பார்த்து பணத்தைப் போடுங்க!
நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!
Share your comments