1. மற்றவை

மாதம் ரூ.70,000 சம்பளம்- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Salary Rs.70,000 per month- Super opportunity for Adi Dravidian and Tribals!

பி.எஸ்சி (Life Science) முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியருக்கு இலவசமாக தாட்கோ மூலம் Medical Coding Training பயிற்சி அளித்து பல்வேறு மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இலவச பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளங்கலை அறிவியல் (Life Science) முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் அடிப்படையில் பல்வேறு மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க இந்தத் திட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தகுதி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களாக இருக்க வேண்டும். இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் பெற்றிருக்கவேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணத் தொகை ரூ.15,000. இதை தாட்கோ வழங்கும்.

சான்றிதழ்

பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு ISO தரத்துடன் கூடிய சான்றிதழ் அளிக்கப்படும்.

வேலைவாய்ப்பு

பயிற்சியில் தேர்ந்த மாணவர்களுக்கு நேர்முக தேர்வின் மூலம் 100 சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்தபடியே அந்நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ12,000 முதல் ரூ,15,000 வரை கிடைக்கும். பின்னர் திறமைக்கேற்ப ரூ,50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊதியமாக பெறலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் WWW.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

English Summary: Salary Rs.70,000 per month- Super opportunity for Adi Dravidian and Tribals! Published on: 25 August 2022, 10:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.