இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அதன் ATM-கள், கிளைகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டண விதிகள் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புகளுக்கான பாஸ் புக் கட்டணங்கள் ஆகியவற்றுக்கான விதிகளையும் திருத்தியுள்ளது.
அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு (BSBD) புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் ஜூலை 1, 2021 முதல் நடைமுறையில் வரும் என்று ஒரு அறிக்கையை எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ளது
ஏடிஎம் மற்றும் கிளையில் கணக்கில் இருந்து கணக்கை எடுப்பதற்கான விதிகளில், நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் போதுரூ .15 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று SBI தெரிவித்துள்ளது. முதல் நான்கு முறை எடுக்கும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் நான்கு முறை கட்டனம் ஏதும் இன்றி பணம் எடுக்கலாம், அதற்கு மேல் ஐந்தாவது முறை அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் போது, . புதிய சேவை கட்டணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .15 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவில் வசூலிக்கப்படும்
SBI சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பாஸ்புக் கட்டணம்:
எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இப்போது ஒரு நிதியாண்டில் 10 காசோலைகள் கொண்ட செக் புக் இலவசமாக வழங்கும். இதன் பின்னர், எஸ்பிஐ 10 இலை காசோலைகள் உள்ள செக் புக்கிற்கு ரூ .40 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளலும், 25 காசோலைகள் உள்ள செக் புக்கிற்கு ரூ .75 மற்றும் ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்.
உடனடியாக பெறப்படும் காசோலை புத்தகத்திற்கு, 10 காசோலைகள் உள்ள செக் புக்கிற்கு ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு செக் புக் புதிய சேவை கட்டணத்திலிருந்து எஸ்பிஐ விலக்கு அளித்துள்ளது.
மேலும் படிக்க..
ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை நகைக்கடன் - அதுவும் SBI வங்கியில்!
SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி வங்கி கிளையை ஆன்லைனில் மாற்றலாம்!!
SBI PPF சுப்பர் ஸ்கீம் : மாதத்திற்கு ரூ .9,000 முதலீடு… இத்தனை ஆண்டுகளில் ரூ .28 லட்சம் ரிட்டன் !
Share your comments