உங்களுடைய பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து சேமிக்க விரும்பினால், அதற்கு நிறைய திட்டங்கள் உள்ளன. சிலர் தபால் நிலையத்தில் சேமிப்பார்கள். சிலர் வங்கிகளில் சேமிப்பார்கள். உண்மையில் எங்கே சேமிப்பது சிறந்தது? போஸ்ட் ஆபிஸ் திட்டமோ அல்லது வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டமோ, பணத்தை முதலீடு செய்வதற்கு முன் எங்கு முதலீடு செய்வது நல்லது என்று முதலில் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எங்கு அதிக நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
எஸ்பிஐ ஃபிக்சட் டெபாசிட் (SBI Fixed Deposit)
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்பு முதலீட்டு விருப்பத்தை வழங்குகிறது. எஸ்பிஐ தனது நிலையான வைப்பு வட்டி விகிதங்களை சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 13 அன்று, வங்கி தனது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதன் காரணமாக, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத் தொகைகளுக்கு 2.90% முதல் 5.65% வரை வட்டி வழங்குகிறது. அதே நேரம், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.4% முதல் 6.45% வரை உள்ளது.
போஸ்ட் ஆபீஸ் ஃபிக்சட் டெபாசிட் (Post Office Fixed Deposit)
தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான வசதிகளை வழங்குகிறது. போஸ்ட் ஆஃபீஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் பொறுத்தவரையில், சமீபத்தில் 2 ஆண்டு நிலையான வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்களுக்கு இப்போது 5.7% வட்டி கிடைக்கிறது. 3 வருட நிலையான வைப்புத்தொகைக்கு 5.8% வட்டி கிடைக்கும். 5 வருட கால டெபாசிட்டில் 6.7% வட்டி லாபம் கிடைக்கிறது.
கிசான் விகாஸ் பத்ரா
தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இப்போது 123 மாத டெபாசிட்டுகளுக்கு 7% வட்டி கிடைக்கிறது. ஆனால் கிசான் விகாஸ் பத்ரா 124 மாதங்களுக்கு வைப்புத்தொகைக்கு 6.9% வட்டி வழங்குகிறது. இறுதியாக, இந்த மூன்று டெபாசிட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், போஸ்ட் ஆஃபீஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்தான் இரண்டையும் விட கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. மேலும் மத்திய அரசின் உத்தரவாதமும் இந்தத் திட்டத்தில் உங்களுக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
விவசாயிகள் வங்கி கணக்கில் மானியக் கடன்: விரைவாக விண்ணப்பிக்கவும்!
விவசாயிகளுக்கு பென்சன் திட்டம்: மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்!
Share your comments