நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் மூத்த குடிமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்சிஎஸ்எஸ்) அதிகபட்ச முதலீடு வரம்பு உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
நாட்டின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சாமானிய மக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கியுள்ளார். அத்துடன் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (எஸ்சிஎஸ்எஸ்) அதிகபட்ச முதலீடாக ரூ.15 லட்சம் இருந்த நிலையில், தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளார். இதே போல் இத்திட்டத்திற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கு முன்னதாக 7.6 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8% வட்டி விகிதம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி இத்திட்டத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், 8% வட்டி விகிதத்தின் படி முதிர்வு காலத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.12 லட்சம் வட்டி தொகை கிடைக்கும். அதன்படி உங்களுக்கு மொத்தமாக ரூ.42 லட்சம் வரை சேமிப்பு தொகையாக கிடைக்கும். இதே போல் ஒவ்வொரு ஆண்டின் முடிவில் ரூ.2.4 லட்சமும், ஒவ்வொரு மாத அடிப்படையில் ரூ.20 ஆயிரமும் கிடைக்கும். இதனால் மூத்த குடிமக்கள் முதிர்வு காலத்தில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
மேலும் படிக்க
அஞ்சல் துறை தேர்வு 2023: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குட் நியூஸ்!
Share your comments