நடப்பாண்டில் தென் மேற்கு பருவ மழை தமிழகம் மற்றும் புதுவையில் 16 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது மற்றும் வட கிழக்கு பருவ மழை இயல்பு அளவை ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: கடந்த சில தினங்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவ மழை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தென் மேற்கு பருவ மழை 38 செ.மீ மழை பெய்துள்ளது, இது வழக்கமான 33 செ.மீ மழை அளவுடன் ஒப்பிடும் போது 16 சதவீதம் அதிகமாக உள்ளது என்றார்.
இதே காலகட்டத்தில் சென்னையை பொறுத்த வரை 59 செ.மீ மழை பெய்திருப்பதாக கூறிய அவர், இதன் இயல்பு அளவு 42 செ.மீ, இயல்பை விட 39 சதவீதம் கூடுதல் மழை பொழிவு என்றார்.
நடப்பு செப்டெம்பர் மாதத்தில் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவை 16 சதவீதம் தென் மேற்கு மழை பொழிவை கண்டிருப்பதாகவும் மற்றும் இதன் இயல்பு அளவு 10 செ.மீ, வழக்கத்தை விட 53 சதவீதம் கூடுதல் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் சென்னையில் செப்டெம்பர் மாதத்தில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. இதன் இயல்பு அளவு 10 செ.மீ, இயல்பை காட்டிலும் 92 சதவீதம் மழை பெய்திருக்கிறது. மேலும் அக்டோபர் 2 வது வாரம் வரை தென் மேற்கு பருவ மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தொடங்கவிருக்கும் வட கிழக்கு பருவ மழை பொறுத்தவரையில் தெற்கு ஆசிய நாடுகளுக்கான வட கிழக்கு பருவ மழைக்கான முன் அறிவிப்பின் படி இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளுக்கு வட கிழக்கு பருவ மழை இயல்பு நிலையை ஒட்டி இருக்கும் என்பது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் ஆகும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments