சினிமா பாணியில் திருட்டைக் குலதொழிலாக நடத்தும் கிராமம் பற்றித் தெரியுமா? இங்கு சிறுவர்களுக்கு பெரியவர்கள் பயிற்சி அளிப்பதுதான் வேடிக்கையின் உச்சம்.
குலத்தொழில்
பீகார் மாநிலத்தில் நடக்கிறது இந்தக் கூத்து. பீகார் மாநிலம் கதிகார் மாவட்டம் கோர்ஹா பகுதியில் ஜீராப்கஞ்ச் என்ற கிராமம் உள்ளது.தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறிய இவர்கள் கிச்சட் பழங்குடியினர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்குத் திருட்டுதான் வாழ்வாதாரம். ஏன் எனக் கேட்டால், இதுதான் எங்கள் குலத்தொழில் என்கிறார்கள்.
கத்துக்குட்டிகள்
இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பவது இல்லை. அதற்கு மாறாக திருட்டு தொழிலை முறையாகக் கற்பிக்கிறார்கள். அவர்களுக்கு திருடுவது எப்படி என்பது குறித்து பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பெரியவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி சிறுவர்கள் முதலில் சின்ன சின்ன திருட்டில் ஈடுபடுவார்கள். பிக்பாக்கெட். கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து திருடுவது என முதலில் அவர்கள் தனது தொழிலை தொடங்குவார்கள்.
பெரியத் திருட்டு
பின்னர் அதில் கை தேர்ந்ததும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள், நகை கடைகளில் புகுந்து பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் பணம், நகைகள் சிக்கும். அதன் மூலம் அந்த கிராமமே குதூகலிக்கும்.
தலைவர்
இந்த திருட்டு தொழிலை வழிநடத்த ஒரு தலைவரும் இருக்கிறார் என்பது வேடிக்கை. கொள்ளையில் ஈடுபடும் கிராமத்தினர் தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் அந்த தலைவருக்குத் தவறாமல் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்பது விதி.
பூஜை
கிராமத்தினர் தொழிலுக்கு புறப்படுவதற்கு முன் தங்களது குல தெய்வத்திற்கு பூஜை செய்து விட்டு தான் தொழிலுக்கு புறப்பட்டு செல்கின்றனர். பூஜை செய்யும் போது சமிக்கை கிடைத்தால் தான் அவர்கள் திருட்டுக்கு செல்வார்கள். இல்லையென்றால் தங்கள் திட்டத்தை கைவிட்டு விட்டு வேறு ஒருநாளில் செல்வதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.
சினிமா மாதிரி
இந்த தொழிலால் வீட்டில் இருக்கும் பெண்கள் கை மற்றும் கழுத்து நிறைய நகைகளுடன் வெளியே சந்தோஷத்துடன் சுற்றி திரிகின்றனர். மேலும் கைநிறைய கட்டு, கட்டாக பணத்துடன் ஷாப்பிங் செய்வது. ஓட்டலுக்கு குழந்தை குட்டிகளுடன் வயிறு முட்ட விதவிதமாக உணவு பண்டங்களை சாப்பிடுவது, தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்ப்பது என தினமும் பொழுது போக்கி வருகின்றனர். பக்கத்து கிராம மக்களே பொறாமை படும் அளவிற்கு இவர்களது சொகுசு வாழ்க்கை அமைந்துள்ளது.
அம்பலமானது
இவர்களின் இந்த சொகுசு வாழ்க்கைதான், போலீசாரின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் உஷாரான போலீசார் அந்த கிராமத்தில் யார்-யார் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது தொடர்பாகப் பட்டியல் தயாரித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க...
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மஞ்சப்பை பரோட்டா: மதுரையில் அறிமுகம்!
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!
Share your comments